Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 17 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
தனக்கு எதிராக ஆச்சிபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டதென, நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்தார்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் வவுனியா பிதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கு எதிராக ஆச்சிபுரம் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், “ஆச்சிபுரம் பகுதியில் போதை புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் அதனை தடைசெய்யவேண்டும் என்றும், அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களே என்னிடம் தெரிவித்திருந்தனர். அவர்கள் என்னிடம் விடுத்த கோரிக்கைக்கமையவே, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பொலிஸாரை பணித்திருந்தேன்.
“அத்துடன் எதிர்கால சந்ததிகளின் நன்மைகருதி வன்னியில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago