Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, அக்கராயன் ஆற்றைத் துப்புரவு செய்து தருமாறு, அக்கராயன் குளத்தை அண்மித்து வாழ்ந்து வரும் விவசாயிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், இரண்டாவது பெரிய குளமாக அக்கராயன் குளம் விளங்குகிறது.
மழைக் காலத்தில் இந்தக் குளம் நிரம்பி வழிகின்றபோது, குறித்த ஆறு வழியாகவே, வெள்ளம் கடலைச் சென்றடைகின்றது.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, அக்கராயன் ஆறு துப்புரவு செய்யப்படாததன் காரணமாக, குளத்தில் இருந்து வெளியேறும் நீர், நெற்செய்கை நிலங்களுக்குள் புகுந்து நெற்செய்கைகளை நாசம் செய்துவிடுவதாக, விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் இதே நிலைமையே தொடர்வதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆற்றின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றி, ஆற்றைத் துப்புரவு செய்வதன் மூலம், அக்கராயன் குளத்தின் கீழான நெற்செய்கை நிலங்களுக்கு, வெள்ளம் பரவுவதைத் தடுக்க முடியும் என்றும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அக்கராயன் குளத்தில் இருந்து குடமுருட்டிக் குளம் வரையான ஏழு கிலோமீற்றர் வரையான தூரத்தையே, துப்புரவு செய்ய வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
02 May 2026
02 May 2026