Editorial / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தில், ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பதற்காக விதிக்கப்பட்ட தடையை மீறி, வயல் நிலங்களில் ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பதில் சில விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தின்போது, மாவட்டத்தின் வயல் நிலங்களில் ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூடவேண்டும் எனவும் பணிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களையும் மீறி அக்கராயன்குளம், குடமுருட்டிக்குளம் உட்பட பல வயல் நிலங்களில், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு, கமக்கார அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமான முறையில், வயல் நிலங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டால், அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு கமநல சேவை நிலையங்களுக்கே உள்ளன. ஆனால், தொடர்ச்சியாக வயல் நிலங்களின் கீழ் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன.
எனவே, எதிர்காலத்தில், மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு ஆழ்துளைக் கிணறுகளை வயல் நிலங்களில் அமைப்பதை, அதிகாரிகள் தடுக்க வேண்டும் எனத் தெரிவித்த அப்பகுதி பொதுஅமைப்புகள், ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதைத் தடுக்காத கமக்கார அமைப்புகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளன.
13 minute ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
6 hours ago
7 hours ago