Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Niroshini / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட வடமாகாண மீள்குடியேற்ற செயலணி பல்வேறு சிக்கலான விடயங்கள் குறித்து கடந்த 20ஆம் திகதி ஆராய்ந்ததுடன்,எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் சில முடிவுகளை மேற்கொண்டதாக சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்கூட்டத்தில் மீள்குடியேற்றச் செயலணியின் இணைத்தலைவர்களான அமைச்சர் சுவாமிநாதன், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர். மாகாணசபை உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் இந்த செயலணியில் இணைத்தலைவராகப் பணியாற்றுகிறார்.
தேசியக் கொள்கைகள் உள்ளடங்களான மற்றும் அது தொடர்பான அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகாரிகளும் பொருளாதார விவகாரம், வீடமைப்பு நிர்மாணத்துறை, தேசிய பட்ஜட் திணைக்களம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
மீளக்குடியேறுவோருக்கான உடனடி உட்கட்டமைப்பு தேவைகள், சுகாதாரம், வீட்டுத்தேவைகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் பரிபாலனம் ஆகியவை தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
அரசாங்கமும் ஐ. நா நிறுவனங்களும் கூட்டாக இணைந்து வடமாகாண மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் வகையிலான தேவைகளை மதிப்பீடு செய்வது தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
36 minute ago
59 minute ago
2 hours ago