2021 ஜூன் 21, திங்கட்கிழமை

இந்தியாவில் இருந்து வந்த இளைஞன் சிக்கினார்

Niroshini   / 2021 ஜூன் 10 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு வந்த இளைஞன்  ஒருவர், இன்று (10), முள்ளியவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த இளைஞனே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு பலர் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மாவட்டங்கள் தோறும் தேடுதல் மேற்கொண்டுவரும் புலனாய்வுப் பிரிவினர், குறித்த இளைஞனை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞன், முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவர் எப்போது, எவ்வாறு வந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .