2025 மே 22, வியாழக்கிழமை

இந்திய மீனவர்களை பார்வையிட்ட பெண் பிரதிநிதிகள்

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

மன்னார் கடற்பரப்பில், எல்லைமீறி வந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை, வவுனியா உள்ளூராட்சி மன்றங்களின் பெண் பிரதிநிதிகள் சிலர் இன்று சந்தித்துள்ளனர்.

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 7 பேரை சந்தித்து, அவர்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் 25 பிரதிநிதிகள் உள்ள நிலையில் அவர்களின் சார்பில் 3 பேர் இன்று இச்சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .