Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
இம்முறை ஒரு சந்தர்ப்பத்தை, வடக்கு பகுதி மக்கள் எமது கட்சிக்கு வழங்க வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
கிளிநொச்சியில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், பல ஆண்டுகள் இங்குள்ள மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு அளித்தனர். அதேபோன்று சரத் பொன்சகாவுக்கும் சந்தர்ப்ம் வழங்கியாயிற்று. ஆனால் தமிழ் மக்களிற்கு எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இம்முறை ஒரு சந்தர்ப்பத்ததை வடக்கு பகுதி மக்கள் தமது கட்சிக்கு வழங்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், ஓகஸ்ட் 18ஆம் திகதி தமது கட்சி மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய உள்ளதாகவும் கூறினார்.
அதன்போது தெரிவாகும் வேட்பாளருக்கு இம்முறை இப்பகுதி மக்கள் சந்தர்ப்பம் ஒன்றை வழங்க வேண்டுமெனவும், அவர் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவை வழங்கி எவற்றை தமிழ் மக்களுக்கு பெற்று கொடுத்தார்கள். இதுவரை தமிழ் மக்களிற்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் தமக்கு தேவையான அனைத்தையும் பெற்றுக்கொண்டு சுகபோக வாழ்க்கையை வாழ்கின்றனர்.
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அனைவரும் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டு சமையலறையில் வாழ்கின்றார். இதுவரை தமிழ் மக்களிற்கு இவர்களால் எதையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என அவர் தெரிவித்தார்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ் மக்களிற்கு வேண்டிய பல அபிவிருத்திகளை நாம் செய்து கொடுத்தோம். இந்த அரசாங்கம் பொறுப்பெடுத்து தமிழ் மக்களிற்கு எதையும் செய்து கொடுக்கவில்லை. மீண்டும் ஒருமுறை எமக்கு உங்கள் ஆதரவை தாருங்கள். அடுத்த ஜனாதிபதி எமது கட்சியிலிருந்தே தெரிவாவார். அவ்வாறு தெரிவானதும் இப்பகுதி மக்களிற்கு பல அபிவிருத்திகளை நாம் முன்னெடுக்க உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் காலத்தில் இங்கு வெளிநாட்டு குப்பைகள் கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்டமை தொடர்பில் அவரிடம் வினவியபோது,
வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் குப்பைகள் மாத்திரமல்ல. இங்கும் குப்பைகளை போடுபவர்கள் இவர்கள்தான் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
5 hours ago