Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2016 டிசெம்பர் 16 , பி.ப. 12:52 - 1 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு கடற்கரையில் ஆழிப்பேரலை போன்ற பெரும் இடர்கள் ஏற்படுகின்ற போது, தற்காப்புக்கான எந்த வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படாத நிலை காணப்படுகின்றது என, அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது, மூவாயிரம் வரையான மக்கள் முல்லைத்தீவில் உயிரிழந்தனர். இவ்வுயிரிழப்புக்குப் பின்னர், போர் நடைபெற்றதன் காரணமாக, தற்காப்பு ஏற்பாடுகள் எவையும் முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படவில்லை.
2009ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் சவுக்கு மரம் நடுகை போன்ற தற்காப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதென திட்டங்கள் வகுக்கப்பட்ட போதிலும், இதுவரை அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
முல்லைத்தீவு நகரத்திலேயே, யுத்தம் காரணமாக மரங்கள் அழிவடைந்த போதிலும், இதுவரை புதிய மரங்கள் எவையும் நடப்படவில்லை. இலங்கையில் இயற்கை இடர்களின் போது முல்லைத்தீவும் ஒரு முக்கிய பாதிப்பு ஏற்படும் இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக முல்லைத்தீவு கடல் பெருக்கெடுக்கும்போது, முல்லைத்தீவு நகரப்பகுதியில் பாதிப்பு ஏற்படும் என்பதால், தற்காப்புக்கான ஏற்பாடுகளாக சவுக்கு மர நடுகை உட்பட கூடுதலான மரங்களை கடற்கரையை அண்மித்து நாட்டுவதன் மூலம் இயற்கையின் தாக்கம் குறைவாகக் காணப்படும் என இப்பகுதி பொது அமைப்புகள் தெரிவிக்கின்றன.
Karthi keyan Sunday, 08 December 2019 02:52 AM
Ponga boss
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago
28 minute ago
31 minute ago