Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Niroshini / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - இரணைதீவு பகுதியில் புனரமைக்கப்பட்ட இறங்குதுறை புரவிப்புயல் காரணமாக சேதமடைந்;துள்;ளதாக, பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இரணைதீவு பகுதியில் உள்ள மக்களின் நன்மைகருதி, இரணைதீவுக்கான இறங்குதுறை யுஎன்டிபி நிறுவனத்தினரால் புனரமைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், அண்மையில் வீசிய புரவிப்புயல் காரணமாக கடுமையாக சேதமடைந்துள்ளது எனத் தெரிவித்த அவர், இதனால், இரணைதீவு மக்களின் கடற்போக்குவரத்துகளில் பாரிய சிரமங்கள் காணப்படுகின்றன எனத் தெரிவித்தார்.
எனவே, தரைத்தொடர்புகள் இல்லாத ஏனைய தீவுகளில் போக்குவரத்துகளைப் போல், வீதி அபிவிருத்தி திணைக்களமோ அல்லது வீதி அபிவிருத்தி அதிகார சபையோ பிரதேச சபையோ இதற்கான படகு சேவைகளை முன்னெடுக்க வேண்டுமென்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
6 hours ago