2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

இரணைதீவு மக்களின் போராட்டம் தொடருகின்றது

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஜூலை 10 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது பூர்வீக நிலங்களில் வாழ்வதற்கான உரிமைகளைப் பெற்றுத்தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இரணைதீவு மக்களுக்கு, உரிய பதில் கிடைக்காததால், கடந்த 70 நாட்களுக்கு மேலாகவும் தமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி இரணைதீவுப் பகுதியில், கடந்த 1992ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட மக்கள், மீள்குடியேற இதுவரை அனுமதிக்கப்படாமையால், கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் தற்காலிகமாகத் தங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தங்களைத் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறவும் அங்கு சுதந்திரமாக தொழில்களைச் செய்வதற்கும் அனுமதிக்கக் கோரி, இவ்வாண்டுமே மாதம் முதலாம்திகதி முதல் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டமானது, எந்தவிதத் தீர்வும் இதுவரை வழங்கப்படாது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இரணைதீவு மக்களை, கடந்த மாதம் 28ஆம் திகதி சந்தித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியுடன் பேசி, இரண்டு வார காலத்துக்குள் தீர்வைப்பெற்றுத் தருவதாகக் கூறியபோதும், எந்தவிதமான பதில்களும் இதுவரை கிடைக்கவில்லையென்று தெரிவித்துள்ள இப்பகுதி மக்கள், தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

பூர்வீகமாகத் தங்கள் நிலத்தில் எந்தக் குறைகளுமின்றி வாழ்ந்த தங்கள் மண்ணில் சென்று வாழ்வதற்கான உரிமையைப் பெற்றுத் தருமாறு, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .