2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

பம்பர குளவி கொட்டியதில் ஒருவர் மரணம்

Editorial   / 2025 ஓகஸ்ட் 08 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள் பம்பர குளவி கொட்டுக்கு இலக்கான நபரொருவர் வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளையில் மரணமடைந்துள்ளார் வெள்ளிக்கிழமை (08) குளவி கொட்டுக்கு இலக்கான மஸ்கெலியா, ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவைச் சேர்ந்த 36 வயதான சிவா கனகரட்ணம் என்பவரே உயிரிழந்துள்ளார். தான் வளர்க்கும் பசுவுக்கு புல் அறுத்துக்கொண்டு, குடிநீர் குழாய் செப்பனிட சென்ற வேளையில் அதி விஷமுள்ள பம்பர குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார். அவரை, டிக்கோயா -கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் மரணித்துள்ளார். இவரது உடலம் டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சவ சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மஸ்கெலியா பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .