2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

தற்பாதுகாப்புக்காக பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 08 , பி.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுவெல, கொத்தலாவல, கெக்கிலிவெல வீதிப் பகுதியில் இன்று பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து முல்லேரியாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ய முயன்றபோது, அவர் வாளால் பொலிஸாரை தாக்க முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனையடுத்து, தற்காப்புக்காக பொலிஸார் சந்தேகநபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் அவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. 

காயமடைந்த சந்தேகநபர் உடனடியாக முல்லேரியாவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பாக கடுவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .