2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

குளவி தாக்குதலில் தொழிலாளி உயிரிழப்பு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 08 , பி.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வூட் - ஓல்டன் தேயிலைத் தோட்டத்தின் கிங் கோரா பிரிவில் வசிக்கும் 36 வயதுடைய தோட்டத் தொழிலாளி ஒருவர் குளவி தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். 

இவர் தனது வீட்டிற்கு குடிநீர் வழங்கும் உடைந்த குழாயை சரிசெய்யச் சென்றபோது அந்த நபர் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவத்தை அடுத்து, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் உள்ள மருத்துவ பரிசோதகர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

நோர்வூட் பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .