Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
இரணைமடுகுளத்தை பார்வையிடுவதற்கு வரும் பொது மக்களுக்கு குளத்தின் அணைக்கட்டு வரை சென்று பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது என பொது மக்கள் குறிப்பிடுகின்றனர். இதனால், தென்னிலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருந்து வருகை தரும் பொதுமக்கள் குளத்தை முழுமையாக பார்வையிட முடியாது. வெளிப்புறமாக நின்று பார்வையிட்டு செல்கின்றனர்.
இரணைமடுகுளம் புனரமைக்கப்பட்ட பின்னர் பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்த போதும், ஏப்ரல் 21க்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. குறித்த தடை இன்று வரை தொடர்ந்தும் நடைமுறையில் காணப்பட்டு வருகிறது என பொது மக்கள் தரப்பால் தெரிவிக்கப்பட்டது.
எனவே, இது தொடர்பில் கிளிநொச்சி, இரணைமடுகுள நீர்ப்பாசன பொறியியலாளர் பரணிதரனை தொடர்பு கொண்டு வினவிய போது, அதற்கு பதிலளித்த அவர், நாட்டில் உள்ள ஏனைய குளங்களில் நடைமுறையில் உள்ள கட்டுபாடுகள் போன்றே இரணைமடு குளத்திலும் பின்பற்றுகின்றோம், குளத்தை பார்வையிட வருகின்றவர்கள் திணைக்களத்தின் அனுமதியை பெற்றே பார்வையிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago