Niroshini / 2021 ஜனவரி 11 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சியில் பெய்துவரும் தொடர் மழையால், கிளிநொச்சி நீர்ப்பாசனக் குளங்கள் மீண்டும் வான் பாய ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம், வெள்ள எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த நீர்ப்பாசனத் திணைக்களம், இணைமடுக்குளம் 3 அடி வான் பாய்வதாகவும், இதனால், அதன் 14 வான் கதவுகளும் 12 அங்குலமாக திறந்து விடப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளது.
அதிக நீர் வருகை காரணமாக, நேற்று (10) இரவு, 6 வான் கதவுகள் திறந்து விடப்பட்டன எனவும், இன்று (11) ஏனைய வான் கதவுகள் திறக்கப்பட்டன எனவும், நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே,, பன்னங்கண்டி, முரசுமோட்டை, ஊரியான், கண்டாவளை, பரந்தன், உமையாள்புரம் உள்ளிட்ட தாழ்வு நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு, மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இடர் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கிராம சேவையாளர், படையினர், பொலிஸாரின் உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறும், மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கல்மடு குளம் - 2 அங்குலமும், பிரமந்தனாறு குளம் - 2 அங்குலமும், கனகாம்பிகை குளம் - 3 அங்குலமும், அக்கராயன்குளம் - 1 அங்குலமும், கரியாலை நாகபடுவான் குளம் - 3 அங்குலமும், புதுமுறிப்பு குளம் - 1 அங்குலமும், குடமுருட்டிகுளம் - 3 அங்குலமும், வன்னேரிக்குளம் - 1 அங்குலமும் வான்பாய்ந்து வருகின்றது.
குறித்த குளங்களின் கீழ் உள்ள பகுதிகளுக்கு வெள்ள முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், வெள்ள அனர்த்த பகுதிகளாக காணப்படும் பொன்னகர், கனகாம்பிகை குளம், ஆனந்தபுரம் கிழக்கு, இரத்தினபுரம், பிரமந்தனாறு, தர்மபுரம், உழவனூர், பெரியகுளம், கல்லாறு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான, வசந்தநகர், முறிகண்டி, செல்வபுரம் பகுதிகளில் உள்ள மக்களும் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025