2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

இராஜாங்க அமைச்சர் துமிந்த கிளிநொச்சி விஜயம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்ரமணியம் பாஸ்கரன்

சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, கிளிநொச்சிக்கு நேற்று (07) விஜயம் மேற்கொண்டிருந்தார்.

சூரியசக்தி மற்றும் காற்றலை மின் உற்பத்தியை மாவட்டத்தில் மேற்கொள்ளல் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாக விசேட கலந்துரையாடலில் அவர் ஈடுபட்டார். 

குறித்த கலந்துரையாடல், இராஜாங்க அமைச்சர் தலைமையில், கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றுக் காலை நடைபெற்றதுடன், கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர், பூநகரி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி, பூநகரி, கௌதாரிமுனை பகுதியில் சூரியமின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பில் ஏற்கெனவே திட்ட மும்மொழிவுகள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X