Princiya Dixci / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
செட்டிகுளம் - சண்முகபுரம் பகுதியில்,குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக, செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராமையா நல்லநாதன் என்பவரே, இவ்வாறு காணாமல் போயுள்ளதாக, அவரது மனைவி செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு செய்துள்ளார்.
கடந்த வெள்ளிளிகிழமை (05), கடைக்கு செல்வதாக தெரிவித்துவிட்டு வீட்டில் இருந்து சென்றவர், 2 நாள்கள் கடந்தும் வீடு திரும்பவில்லையென்று, குறித்த நபரின் மனைவி தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, இவர் தொடர்பில் தகவல் அறிந்தோர், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது 0766975067 எனும் அலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டோ தெரிவிக்குமாறு, பொதுமக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.
5 minute ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 Nov 2025
15 Nov 2025