Editorial / 2022 ஜனவரி 05 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் புத்தாண்டு தினத்தன்று இளைஞர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், இருவேறு நாட்களில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தில் 24 வயதான குணரட்னம் கார்த்தீபன் படுகொலைச்செய்யப்பட்டார். மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பிலான வழக்கு விசாரணை, கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, நீதவான் லெனின்குமார் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இளைஞனின் கொலைக்கு நீதிக்கோரி பரந்தன் வர்த்தகர்கள் கடந்த 03ஆம் திகதியன்று முழுக் கடையடைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
படுகொலை சம்பவம் தொடர்பில், பொலிஸாரால், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில், எதிர்வரும் 12 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
18 minute ago
25 minute ago
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
29 minute ago
1 hours ago