Niroshini / 2021 ஜூலை 22 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்
வன்னி வாழ் மக்களே உங்கள் கைகளால் உங்கள் கண்களை குத்திக்கொண்டிருக்கின்றீர்கள் என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவில், இன்று (22) நடைபெற்ற பெண்கள் - சிறுவர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், 15 அகவை பூர்த்தி செய்யாத பெண் பிள்ளையை வேலைக்கு அமர்த்தக்கூடாது அல்லது வேலைக்கு விடக்கூடாது என்பது ஒரு ஏழைத் தாய்க்கு தந்தைக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால், ஓர் அமைச்சராக இருந்தவர் மக்கள் பிரதிநிதிக்கு அவரின் குடும்பத்துக்கு இந்த சட்டம் தெரியாமல் இருப்பது என்பது நியாயம் அல்ல என்றார்.
டயகம சிறுமி உயிரிழப்பின் மர்மம் வெளிக்கொணர வேண்டுமெனத் தெரிவித்த அவர், பெண்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும், ஒவ்வொரு தாயும் தங்கள் பிள்ளைகளை கண்ணுக்கு எண்ணெய் விட்டது போல் கவனிக்க வேண்டுமெனவும் கூறினார்.
8 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago