2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம்: ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு

Niroshini   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்,பா.திருஞானம்

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள், கடந்த பல நாட்களாக அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு கோரி ஜனாதிபதியிடம் மகஜரொன்றை கையளித்தனர்.

அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவிகள் தாக்கப்பட்டமை குறித்து தெளிவுபடுத்தும் வகையிலான குறித்த மகஜர் அமைந்திருந்தது.

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, நேற்று யாழ். சுப்ரமணியம் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட போதை ஒழிப்பு நிகழ்வில் கலந்துகொண்டார்.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதியை, அங்கு வந்து சந்தித்த உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள், அவரிடம் குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .