2025 ஜூலை 21, திங்கட்கிழமை

உண்ணாவிரதத்துக்கு த.தே.ம.மு ஆதரவு

எம். றொசாந்த்   / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு வழங்குவதாக, முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.  

யாழ். ஊடக அமையத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  

“அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி 20ஆம் திகதி முதல் உண்ணாவிரதம் முன்னெடுத்துள்ளதால், அவர்களின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளது. 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2013ஆம் ஜூலை வவுனியாவில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்து, சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்கு மூலம் பெறப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், 4 வருடங்களாக வழக்கு விசாரணைகளை நடத்தவில்லை. அரச சட்டவாதிகள் தவணை கோரி வருகின்றனர். இது தமிழர்களை பழிவாங்கும் நடவடிக்கையாகும்.  

“செய்யாத குற்றத்துக்கு சிங்கள பிரதேச நீதிமன்றக்கு கொண்டு சென்று குற்றவாளியாக காண, அரசாங்கம் முயல்வதாக, கைதிகளின் உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். வேறு பிரதேசத்துக்கு வழக்கை மாற்றுவதை ஏற்க முடியாது. கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு வழங்கும். வழக்கு வவுனியாவில் நடைபெற வேண்டும். இல்லையேல், விடுதலை செய்ய வேண்டும். அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தனக்கு அதிகாரமில்லை என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய போது அரசியல் கைதிகளின் விடுதலை, காணி மீட்பு உள்ளிட்ட விடயங்களை பேரம் பேசி இருக்க வேண்டும். ஆனால், அதனை செய்யவில்லை. நிபந்தனையில்லா ஆதரவு வழங்கியது அடி முட்டாள்தனமான செயற்பாடு” என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .