Editorial / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - கொக்கிளாயில் தமிழ்க் கடற்றொழிலாளர்களின் கடற்றொழில் உபகரணங்களைப் பாதுகாப்பதற்கான கட்டடமொன்றை நிர்மாணிக்க வேண்டுமென, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர், கொக்கிளாயில் இரண்டு சிங்கள மீன்பிடிச் சங்கங்களும் ஒரு தமிழ் மீன்பிடிச் சங்கமும் இயங்குகின்றனவெனவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒன்றரை கோடி ரூபாய் நிதியில் கொக்கிளாயில் அமையவுள்ள கடற்றொழில் உபகரணப் பாதுகாப்புக் கட்டடம் சிங்கள மீன்பிடிச் சங்கம் ஒன்றிற்கே முதலில் அமைக்கப்படவுள்ளனவெனவும் தெரிவித்தார்.
போரினால் பெரும் அழிவுகளை எதிர்கொண்ட தமிழ் கடற்றொழிலாளர்கள் தங்களுடைய உபகரணங்களைப் பாதுகாப்பதற்கான கட்டடத்தினை விரைவாக அமைக்குமாறு தன்னிடமும் உயரதிகாரிகளிடமும் மனுக்கள் கையளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் முல்லைத்தீவுக்குகுப் பயணம் செய்து மேற்படி கட்டடங்கள், இறங்குதுறைகள் அமையவுள்ள இடங்களை கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் பார்வையிட்டபோது, கொக்கிளாயில் தமிழ் கடற்றொழிலாளர் சங்கங்கத்துக்கு உபகரண பாதுகாப்புக் கட்டடத்தை முதன்மைப்படுத்தி அமைக்குமாறு தான் கோரிக்கை விடுத்திருந்தாகவும் அவர் குறிப்பிட்டார்..
இதேவேளை, நாயாறிலும் வாடிகள் எரிக்கப்பட்ட பகுதிகளில் கடற்றொழிலாளர்களின் உபகரணங்களைப் பாதுகாப்பதற்கான கட்டடம் அமைய வேண்டும் என்பதனையும் அதிகாரிகளிடம் தான் தெரிவித்திருந்தாக, அவர் மேலும் கூறினார்.
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026