2025 மே 06, செவ்வாய்க்கிழமை

உயர்தரப் பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்திய மாநாடு

Freelancer   / 2022 பெப்ரவரி 19 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு காரணமாக சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற உயர் தரப்பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது .

நகரசபையினருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்து கட்சியின் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களுக்கு  ஒலி பெருக்கியின் சத்தங்களை குறைத்து மாணவர்களின் பரீட்சைக்கு இடையூறின்றி கட்சியின் மாநாட்டை நடாத்துமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இன்று (19)  காலை 9.30 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாநாடு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில்  ஆரம்பிக்க நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது. 

எனினும் மண்டபத்தில் ஒலி பெருக்கியின் அதிக சத்தத்தினால் அருகிலுள்ள வைசப்பிரகாசா மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த கட்சியின் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களிடம் பாடசாலையில் உயர்தர மாணவர்கள் பரீட்சை இடம்பெற்று வருகின்றது எனவே ஒலி பெருக்கியின் சத்தங்களை குறைத்துக்கொண்டு மாநாட்டை நடாத்துமாறு  நகரசபையினரால் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. 

ஒருசில மணித்தியாலயத்தின் பின்னர் கட்சியின் மாநாடு முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமாகியது . 

குறித்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான நிமால் சிறீபால, தயாசிறி ஜெயசேகர,
துமிந்த திஸாநாயக்க, முன்னாள் மத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்கா, பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் மற்றும் நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X