Editorial / 2018 மே 07 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் கடைகளை, வவுனியாவில் உள்ளூர் உற்பத்திகளை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டுமென, வடமாகாண சபை உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில், கடந்த வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் போதும், அவரால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அதில், வவுனியா மதகுவைத்தகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பொருளாதார மத்திய நிலையத்தில், 50 கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை, திறந்த கேள்விக் கோரல்மூலம் வழங்குவதற்கு, கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறியகிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடைகளை வழங்குவதற்கான திறந்த கேள்விக் கோரல் மேற்கொள்ளப்பட்டால், தென்பகுதி வியாபாரிகளுடன், வவுனியா வியாபாரிகள் போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்படுமென்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதனால், வட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகளுக்குக் கடைகள் கிடைக்காமல்போக வாய்ப்பு ஏற்படுமென்றும் முன்னுரிமை அடிப்படையில் கடைகளை வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
இவரது கோரிக்கையானது, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, மாவட்ட அரசாங்க அதிபரினால், கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு, கடிதமூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
23 minute ago
24 minute ago
44 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
24 minute ago
44 minute ago
4 hours ago