2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

உவர் நிலங்களாக மாறியுள்ள விவசாய நிலங்கள்

Freelancer   / 2022 பெப்ரவரி 06 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி - பூநகரி, கரியாலை, நாகபடுவான் பகுதியில் உள்ள உவர் நீர் தடுப்பணைகள் சேதமடைந்தமையால் சுமார் 6,000 ஏக்கர் விவசாய நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள பல்லவராயன்கட்டு, கரியாலை, நாகபடுவான், குமுழமுனை, நொச்சிமுனை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் கரையோரப் பகுதிகளில் காணப்பட்ட உவர் நீர்த்தடுப்பணைகள் சேதமடைந்தமை காரணமாக கடல்நீர் உட்புகுந்து விவசாயச் செய்கை நிலங்களாக காணப்பட்ட பயிர் செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளன.

இவ்வாறு உவர் நீர்த்தடுப்பணைகள் அழிவடைந்து உவர் நீர் உட்புகுந்தமையால் சுமார் 6,000 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கரையோரப்பகுதிகளில் சேதமடைந்த உவர் நீர்த்தடுப்பணைகள்  புனரமைக்கப்படும் போது நாளடைவில் குறித்த நிலங்கள் பயிர்செய்கை நிலங்களாக மாற்றமடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X