Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு சாலை ஆற்றுக்கு குறுக்கே உவர் நீர் பரவாமல் அணை அமைக்குமாறு இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனந்தபுரம், இரணைப்பாலை ஆகிய கிராமங்களுக்கு சாலை ஆறு வழியாக உவர் நீர் பரவுவதன் காரணமாக இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய கிராமங்கள் உவரடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக நன்னீர் கிணறுகள் உவர் நீராக மாற்றமடைந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
கடந்த பத்தாண்டுகளாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில் இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்ட போதிலும் உவர் நீர் பரம்பலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனவும் கூறினர்.
சாலை ஆறு வழியாக உவர் நீர் பரவுவதை தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய கிராமங்கள் உவர் நிலங்களாக மாறக் கூடிய அபாய நிலை காணப்படுகின்றது.
இதேவேளை, இரட்டைவாய்க்கால் சந்தி தொடக்கம் மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் போர் காலத்தில் அமைக்கப்பட்ட மண் அணைகளை அழித்து மழை நீர் வழிந்தோடக் கூடியவகையில் நிலத்தோற்றத்தை மாற்றுமாறு, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago