Editorial / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
கடற்படை அதிகாரி ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்யும் முகமாக, முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர், இன்று (18) முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், ஏப்ரல் 07ஆம் திகதியன்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் பேராட்டத்தில், கலந்துகொண்டவர்களையும் ஊடகவியலாளர்களையும் இனந்தெரியாத நபரொருவர் தன்னை கடற்படை அதிகாரியென அடையாளப்படுத்திகொண்டு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.
இதையடுத்து, குறித்த நபருக்கு எதிராக ஊடகவியலாளர்கள் செயற்பட்டமைக்காக, குறித்த நபர், ஊடகவியலாளர்களை பழிவாங்கும் நோக்கில், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடொன்றை செய்யுதுள்ளார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் முகமாகவே, குறித்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் முகமாகவே, குறித்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
7 minute ago
13 minute ago
14 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
14 minute ago
19 minute ago