Editorial / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற சுயாதீன ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை இன்று (08) கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று (07) மாலை இடம்பெற்ற சுயேட்சைக்குழுவின் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்ற சுயாதீன ஊடகவியலாளரை, சுயேட்சைக்குழுவின் ஆதரவாளர் ஒருவர் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த ஊடகவியலாளர் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
23 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
7 hours ago