Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-விஜயரத்தினம் சரவணன், சுப்பிரமணியம் பாஸ்கரன், செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, வடமாகாண ஊடகவியலாளர்களால், முல்லைத்தீவில், இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.
முன்னதாக, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் ஒன்றுகூடிய ஊடகவியலாளர்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் வரை சென்று, அங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து, பொலிஸஸ் அத்தியட்சகரிடம் மகஜரொன்றும் மரக்கன்று ஒன்றும் கையளிக்கப்பட்டன.
தொடர்ந்து அங்கிருந்து மாவட்டச் செயலகம் வரை பேரணியாகச் சென்ற ஊடகவியலாளர்கள், மாவட்டச் செயலாளரின் பிரதிநிதி ஒருவரிடம் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றை கையளிக்கப்பட்டதுடன், மரக்கன்று ஒன்றையும் வழங்கினர்.
அதையடுத்து, முள்ளியவளையில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசி திணைக்கள அலுவலகத்துக்கு ஊடகவியலாளர்கள் பேரணியாகச் சென்றனர்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, கிளிநொச்சியிலும், இன்று (15) காலை 10 மணிக்கு, கண்டனப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்ததது.
16 minute ago
25 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
43 minute ago