2025 மே 06, செவ்வாய்க்கிழமை

எங்கள் பிரச்சினையை நாங்கள் தான் தீர்க்க வேண்டும்

Freelancer   / 2022 ஜனவரி 29 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எங்கள் நாட்டில் உள்ள பிரச்சினைகளை எங்கள் நாட்டில் தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும் கட்சிகளுக்கு தேவையான ஏதும் இருக்குமாக இருந்தால் ஜனாதிபதியுடன் கதைத்து தீர்த்துக்கொள்வதற்கு நாங்கள் முயற்சி செய்கின்றோம்.

இலங்கை வாழும் அனைவரும் கன்னியத்துடன் வாழக்கூடிய அரசியல் திட்டத்தினைதான் நாங்கள் முன்வைக்க தயாராகின்றோம் என்று  முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் நீதி அமைச்சர் அலிசப்ரி இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரினை இலக்குவைத்தே நீதிஅமைச்சு இவ்வாறு செய்படுகின்றது என்று ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்.

அவர்கள் போராட்டம் செய்யலாம் எங்களால் முடிந்ததைத்தான் நாங்கள் செய்யலாம். இது காணாமல் போனவர்களை மட்டும்கொண்ட வேலையல்ல 17 பிரிவுகளின் கீழ் இங்கு நடமாடும் சேவை நடக்கின்றது.

போரில் சம்மந்தப்பட்ட பலர் உயிர் இல்லாமல் போயிருக்கின்றது. அதனை இல்லை என்று சொல்லமுடியாது. இராணுவத்தில் கூட காணாமல் போயுள்ளார்கள்.  எங்களிடம் வந்து உயிரினை கேட்டால் உயிர் கொடுக்கமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X