Niroshini / 2021 ஜனவரி 06 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - எருக்கலம்பிட்டி கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, எருக்கலம்பிட்டி கிராமம், நேற்று (06) காலை முதல், தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி. வினோதன் தெரிவித்தார்.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தொற்றுக்குள்ளானவர்கள், டிசெம்பர் 26ஆம் திகதியன்று, புத்தளத்தில் இருந்து மன்னார் - எருக்கலம்பிட்டி கிராமத்துக்கு வருகை தந்துள்ளனர் என்றார்.
குடும்பத் தலைவர், புத்தளத்தில் இருந்து கொழும்புக்கு சென்று, டிசெம்பர் 29ஆம் திகதியன்று, மீண்டும் புத்தளத்துக்கு வந்த போது, நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த அவர், இதன்போது, குறித்த நபருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, இவருடைய குடும்ப உறுப்பினர்கள் 6 பேரும், எருக்கலம்பிட்டியில் உள்ள அவர்களது 'வீடுகளில் சுயதனிமைப்பட்டு, பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, குறித்த குடும்பத்தலைவரின் மகள், மூன்று மகன்கள், மகளினடைய கணவர் ஆகிய 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவருடைய் மனைவிக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை. தொற்றுதி செய்யப்பட்டவர்கள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கொரோனா தடுப்பு வைத்தியசாலை, தம்பதெனியாவில் உள்ள கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்' எனவும், அவர் கூறினார்.
இவர்கள், டிசெம்பர் 26ஆம் திகதியன்று, எருக்கலம்பிட்டி கிரமத்துக்கு வருகை தந்து, 27ஆம் திகதி திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர் எனத் தெரிவித்த அவர், இதையடுத்து, குறித்த திருமண வீட்டுக்குச் சென்றவர்களினதும் இவர்களுடன் தொடர்பை பேணியவர்களினதும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர் எனவும் கூறினார்.
இந்த நடவடிக்கை முடிவடையும் வரை, எருக்கலம்பிட்டி கிராமம், தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, வைத்தியர் டி. வினோதன் தெரிவித்தார்.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025