2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

எலும்புகூடாக காணப்பட்ட சடலம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 29 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் - சிலாவத்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்து பல நாட்கள் ஆகி சிதைவடைந்து  எலும்புகள் தெரியும் வண்ணம் குறித்த சடலம் காணப்படுகின்றது.

முத்தரிப்புத்துறை மீனவர்களால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) இந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கடலுக்குள் வலை பாய்ச்சுவதற்காக சென்ற மீனவர்கள் குறித்த சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தொடர்பாக சிலாவத்துறை பொலிஸாருக்கு  மீனவர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X