Niroshini / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-விஜயரத்தினம் சரவணன்
கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கட்பட்ட குமுழமுனை மேற்கு கிராம சேவகர் பிரிவில் வன வள பாதுகாப்பு திணைக்களத்தினரால் எல்லைக்கற்கள் இடும்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று, மாவட்டச் செயலக சபாநாட்டு மண்டபத்தில், மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் தலைமையில், இன்று (31) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வருகை தந்த பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து கொண்ட மாவட்டச் செயலாளர், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்றை அமைத்து ஜனவரி 15ஆம் திகதியின் கள விஜயத்தின் பிற்பாடு முடிவெடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிகச் செயலாளர், மாகாண காணி ஆணையாளர், சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர், வன ஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர், மாவட்ட செயலக காணிப் பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர், மாவட்ட வனவள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம சேவகர், கிராமிய அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
7 minute ago
17 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
2 hours ago