2025 மே 23, வெள்ளிக்கிழமை

’எழுத்து மூலம் அறிவித்தால் வீதி புனரமைக்கப்படும்’

Editorial   / 2019 மார்ச் 25 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா – வேப்பங்குளம் பகுதி வீதியை தற்காலிகமாகப் புனரமைப்பது தொடர்பில்,  வவுனியா நகரசபைத் தவிசாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கும் பட்சத்தில், அது தொடர்பில், உடன் நடவடிக்கை எடுக்கப்படுமென, வேப்பங்குளம் வட்டாரத்தின் நகசரபை உறுப்பினர் அல்துல் பாரி தெரிவித்தார்.

வேப்பங்குளம் தூய சூசையப்பர் தேவாலயத்துக்குச் செல்லும் வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாது குன்றும் குழியுமாகக் காணப்படுகிறது.

குறித்த தேவாலயத்தின் திருவிழா மே மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அவ்வீதியை புனர​மைத்துத் ​தருமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ​இவ்விடயம் குறித்து வேப்பங்குளம் வட்டாரத்தின் நகசரபை உறுப்பினர் அல்துல் பாரியிடம் தொடர்புகொண்டு வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், குறித்த வீதி கார்பட் வீதியாகப் புனரமைப்பதற்கு, நகரசபையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

எனினும், திருவிழா இடம்பெறவுள்ளதால், குன்றும் குழியுமாகக் காணப்படும் இடங்களைத் தற்காலிகமாகப் புனரமைக்க முடியுமெனவும் எனவே, இது தொடர்பில், தேவாலயத்தின் பங்குத்தந்தை, நகரசபைத் தவிசாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கும் பட்சத்தில், உடன் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X