2025 மே 10, சனிக்கிழமை

’ஏ-32 வீதியில் புதிய பாலம் வேண்டும்’

Niroshini   / 2021 ஜூலை 06 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - பூநகரி, பல்லவராயன்கட்டுச் சந்தியில், புதிய பாலம் அமைய வேண்டுமென, பூநகரி பிரதேச சபை உறுப்பினர் அ.கேதீஸ்வரன் தெரிவித்தார். 

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், பூநகரியில் உள்ள கரியாலைநாகபடுவான்குளம், பல்லவராயன்கட்டுக்குளம் ஆகிய இரு குளங்களும் வான்பாய்கின்ற போது, மன்னார் - யாழ்ப்பாணம் வீதியின் பல்லவராயன்கட்டுச் சந்தியில், ஏ-32 சாலையில், வெள்ள நீர் குறுக்கறுத்துப் பாய்வது வழமை எனச் சுட்டிக்காட்டினார்.

ஏ-32 சாலை புனரமைப்பின் போது, பல்லவராயன்கட்டு பொது அமைப்புகளிடம் ஆலோசனைகள் கேட்காமல், பல்லவராயன்கட்டுச் சந்தியில், சிறிய மதகு வீதி புனரமைக்கப்பட்டுள்ளதாகமத் தெரிவிதத் அவர், இதனால்,  இரு குளங்களில் இருந்து வான்பாயும் போயும், அதனால் ஏற்படும் வெள்ளம் வீதியைக் கடந்து செல்ல முடியாமல் வயல் நிலத்தை மூடும் நிலைமை காணப்படுகின்றதெனவும் கூறினார்.

எனவே, பல்லவராயன்கட்டுச் சந்தியில், ஏ-32 சாலையை பிளந்து 20 அடி வரையான பாலமொன்றை புதிதாக அமைக்கப்படுவதன் மூலம், மழை காலத்தில் பல்லவராயன்கட்டு வயல் நிலங்களுக்கு மழை வெள்ளம் தேங்காமல் இருப்பதற்கான நிலைமை உருவாகுமெனறும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X