Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 09 , பி.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன்
ஏ-9 வீதியின், முல்லைத்தீவு, கொக்காவில் பகுதியிலுள்ள 18ஆம் மைல் கல் பகுதியில் நேற்று (09) இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஹையேஸ் வாகனம் ஒன்று, கொக்காவில் ஏ-9 வீதியின் பழைய முறிகண்டிக்கு அண்மித்த 18ஆம் போர் பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரு ஏற்றிச்சென்ற லொறியுடன் மோதியதில், குறித்த விபத்துச் சம்பவித்துள்ளது.
இவ்விபத்து, நேற்றிரவு 8.35 மணியளவில் இடம்பெற்றது என, பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்விபத்தின் போது, ஹையேஸ் வாகனத்தில் பயணித்த நான்கு பேர், சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
இவ்விபத்துத் தொடர்பான விசாரணைகளை, மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, வாகனத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், பொலிஸாரினதும் வீதியால் பயணித்த பொதுமக்களினதும் உதவியுடனும் மீட்கப்பட்டு, கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
3 minute ago
12 minute ago
28 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
12 minute ago
28 minute ago
30 minute ago