Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஜூன் 20 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கர்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள ஒட்சிசன் சிலிண்டர்களுக்கு ஒட்சிசன் நிரப்பும் இயந்திரத்துக்குள் இரும்புத் துகள்கள் போடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.
பல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வந்த கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலுள்ள குறித்த இயந்திரப்பகுதியானது, கடந்த 2012 - 2017 ஆம் ஆண்டு வரை இயங்காத நிலையில் காணப்பட்டது.
அக்காலப் பகுதியில் இருந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முயற்சியினால் குறித்த இயந்திரத் தொகுதி சீராக்கப்பட்டு சிலிண்டர்களுக்கான ஒட்சிசன் நிரப்பப்பட்டுவந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2018 குறித்த இயந்திரத் தொகுதியை செயலிழக்க செய்யும் நோக்கில் இயந்திரத்தின் இயங்கு பகுதிக்குள் விசமிகளால் திட்டமிட்டு மணல் போடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு உடனடியாக திருத்தி அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி குறித்த இயந்திரத்துக்குள் மீண்டும் இரும்பு துகள்கள் போடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது வைத்தியசாலைக்கு தேவையான ஒட்சிசன் சிலிண்டர்களை நிரப்ப முடியாத நிலையில் 99 சிலிண்டர்கள் அனுராதபுரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2012 - 2017ஆம் ஆண்டு வரையிலும் வெளியிலிருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை நிரப்புவதற்காக சுமார் 53 மில்லியன் ரூபாவுக்குவிற்கும் மேற்பட்ட நிதி செலவிடப்பட்ட நிலையிலேயே குறித்த இயந்திரப் தொகுதி சீரமைக்கப்பட்டு ஒட்சிசன் நிரப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கபட்டடு வந்த நிலையில், அவை மீண்டும் திட்டமிட்டு சேதமாக்கப்பட்டடுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு சி.சி.டி.வி ஒலிப்பதிவுகளை வைத்தியசாலை நிர்வாகம் வழங்கவல்லை எனவும் அறியமுடிகின்றது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago