Niroshini / 2022 ஜனவரி 02 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - பெரியபரந்தன் கமக்கார அமைப்பினுடைய நிதி முறைகேடுகள் தொடர்பில் விவசாயிகளால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக, ஒரு வார காலத்துக்குள் கணக்காய்வுக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக, கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தேவரதன் தெரிவித்துள்ளார்.
பெரியபரந்தன் கமக்கார அமைப்பின் பொருளாளரால், சுமார் 1 கோடியே 3 இலட்சத்து 60 ஆயிரத்து 240 ரூபாய் நிதி, எந்தவித அனுமதியும் இன்றி செலவிடப்பட்டுள்ளதாகவும் சுமார் நான்கு வருடங்களாக கணக்காய்வுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் குறித்த அமைப்பினால் பெருந்தொகை நிதி மோசடி செய்யப்பட்டதாகவும், பிரதேச விவசாயிகளால், கடந்த 28ஆம் திகதியன்று, மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் வைத்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து பதிலளித்த போதே, மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் மேற்கண்டவாறு கூறினார்.
12 minute ago
16 minute ago
29 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
29 minute ago
10 Nov 2025