Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆரம்பித்திருக்கின்ற youth Got talent என்ற போட்டி, நாடளாவிய ரீதியில் இடம்பெறுகின்றது இப்போட்டியிலே வெற்றிபெறும் இளைஞர் கழகத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 16 இளைஞர் கழகங்களில் நாயாறு இளைஞர் கழகமும் ஒன்று.
கழகத்தின் செயற்றிட்டமாகிய விளையாட்டு மைதான வேலிகள் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீகந்தராசா, வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்;, இளைஞர் கழக முல்லைத்தீவு மாவட்ட அலுவலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பலந்துக் கொண்டனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் லழரவா புழவ வயடநவெ இந்த போட்டியில், இளைஞர் சிரம சக்தி என்கின்ற தமது கிராமத்தில் அத்தியாவசியமான வேலைத்திட்டமொன்றை தெரிவு செய்து இளைஞர்கள் செயற்றிட்டத்தை சமர்ப்பிக்கும்போது, அது மாவட்ட ரீதியில் தெரிவு செய்யப்படும்.
தெரிவு செய்யப்படுகின்ற இளைஞர் கழகத்துக்கு 75,000 ரூபாய் வழங்கப்படும் அவர்கள் அந்த நிதியோடு தமது உழைப்பினாலும் முயற்சியாலும் 225,000 பெறுமதியான வேலைத்திட்டதை செய்து முடிக்கவேண்டும்.
தேசிய ரீதியில் முதலிடம்பெறும் இளைஞர் கழகத்துக்கு ஒரு கோடி ரூபாய் பணப்பரிசு வழங்கப்படும்.
இன்னுமொரு போட்டியில், இளைஞர்கிடையே இருக்கின்ற வித்தியாசமான திறமைகளை கண்டறிந்து தேசிய ரீதியில் முதலிடம் பெறுபவருக்கு 4 மில்லியன் ரூபாயும் 2ஆம் இடம் பெறுபவருக்காக 2மில்லியன் ரூபாயும் மூன்றாமிடம் பெறுபவருக்கு 5 இலட்சம் ரூபாயும் 4ஆம் 5ஆம் 6ஆம் 7ஆம் 8ஆம் 9ஆம் இடங்களை பெறுபவர்களுக்காக தலா ஒரு இலட்சம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது.
இப்போட்டியிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து பத்து பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago