Editorial / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரில் பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் ஓட்டோகள் நேற்று வியாழக்கிழமை (19) மாலை திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மன்னாரில் பாடசாலை சேவையில் ஈடுபடும் 25 ஓட்டோகள் இவ்வாறு சோதனைக்கு உற்படுத்தப்பட்டன.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் வைத்து குறித்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி எஸ்.ஐ.ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்ற குறித்த சோதனை நடவடிக்கைகளின் போது, வாகன பரிசோதகர் திஸாநாயக்க கலந்துகொண்டு பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களின் நிலை தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
மேலும் பாடசாலை சேவையினை மேற்கொள்ளும் ஓட்டோககள் எவ்வாறு இருக்க வேண்டும் என ஓட்டோ உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதோடு, உரிய முறையில் பாடசாலை ஓட்டோக்களை வைத்திருக்காதவர்கள், பாதுகாபற்ற முறையில் சேவையை மேற்கொள்ளுவோர் எச்சரிக்கப்பட்டனர்.
குறித்த பரிசோதனை நிகழ்வில், மன்னார் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago