Editorial / 2021 டிசெம்பர் 12 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ரயிலுடன் ஓட்டோ விபத்துக்கு உள்ளானதில், ஓட்டோ சேதமடைந்தது. ஓட்டோவின் சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.
இவ்விபத்து, இன்றுக் காலை 10 மணியளவில் வவுனியா தாண்டிக்குளம் ரயிவே கடவையில், இடம்பெற்றுள்ளது.
ஓமந்தை பகுதியில் இருந்து தாண்டிக்குளம் புகையிரதக்கடவையால் கடக்க முற்பட்ட ஓட்டோ, தண்டவாளப்பகுதியில் சென்றபோது இயந்திரக்கோளாற்றினால் நின்றுள்ளது.
இதன்போது கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணித்த யாழ்.தேவி, குறித்த ஓட்டோவை மோதித்தள்ளியது. ஓட்டோவிலிருந்து சாரதி, கீழே பாய்ந்து தப்பியோடியமையால், உயிர்த்தப்பினார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

22 minute ago
26 minute ago
39 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
39 minute ago
10 Nov 2025