2025 ஜூலை 02, புதன்கிழமை

ஓட்டுத்தொழிற்சாலையை இயக்கி ஒளியேற்றவும்: மக்கள் கோரிக்கை

George   / 2015 நவம்பர் 12 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை மீள இயங்க வைப்பதன் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் தொழில் வாய்ப்புக்களை பெற முடியும் எனவும் இதனை இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பண்டாரவன்னியன் ஓட்டுத்தொழிற்சாலை, கடந்த கால யுத்தம் காரணமாக சேதமடைந்து, செயலிழந்து காணப்படுவதனால் இதனை நம்பி வாழ்ந்த தொழிலாளர் குடும்பங்கள், பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன.
 
மக்கள் மீள்குடியேறி ஆறு வருடங்;களாகியுள்ள நிலையிலும் இதனை இயங்க வைப்பதற்கு இதுவரை நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் இதனை இயங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
1968 மே மாதம் 20ஆம் திகதி ஒட்டுசுட்டான் ஓட்டுதொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது.
 
அக்காலத்தில் 74 நிரந்தர ஊழியர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களும் கடமையாற்றி வந்தனர். 200க்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கிய ஒட்டுத்தொழிற்சாலை, 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தம் காரணமாக செயலிழந்த நிலையில் இன்றுவரை இயங்கவில்லை.
 
பலகோடி வருமானத்தை ஈட்டக்கூடிய இந்த ஓட்டுத்தொழிற்சாலையினை இயங்க வைப்பதன் மூலம் பலரது வாழ்வில் ஒளியேற்ற முடியும் எனவும் இதனை இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்;கை விடுத்துள்ளனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .