Editorial / 2023 ஜூலை 30 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம்-கண்டி ஏ9 பிரதான வீதியில் வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டி மற்றும் உழவு இயந்திரத்தில் லொறியொன்று மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இயந்திர கோளாறு கெப் வண்டி வீதியோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை இழுத்துச் செல்ல வந்த உழவு இயந்திரமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அப்போது வவுனியா நோக்கி வேகமாக பயணித்த லொறி, கெப் வண்டி மற்றும் உழவு இயந்திரத்தில் மோதியுள்ளது.
விபத்தில் கெப் வண்டியின் சாரதி மற்றும் உழவு இயந்திரத்தின் சாரதி ஆகியோர் காயமடைந்து நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கெப் வண்டி சாரதியான தலவாக்கலை கிரேட்வெஸ்ர்டன் தோட்டத்தை சேர்ந்த 28 வயதான ராமச்சந்திரன் சதீஷகுமார் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள லொறி சாரதி மதுபோதையில் வாகனத்தை செலுத்தியதாக சந்தேகிக்கப்படுவதுடன் அவர் வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து காரணமாக கெப் வண்டி மற்றும் உழவு இயந்திரம் ஆகியவற்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்த ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
23 minute ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
04 Nov 2025