2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கசிப்பு காய்ச்சும் தொழிற்சாலை சுற்றிவளைப்பு: இருவர் கைது

Menaka Mookandi   / 2016 ஜூலை 24 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி, புளியம்பொக்கணைப் பகுதியில் கசிப்பு காய்ச்சலில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரையும், கல்லாறு பகுதியில் மோட்டார் சைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற சந்தேகநபர் ஒருவரையும் சனிக்கிழமை (23) தர்மபுரம் பொலிஸார் கைது செய்தனர்.

தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், புளியம்பொக்கணைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கசிப்பு காய்ச்சும் தொழிற்சாலை முற்றுகையிடப்பட்டதுடன், அதனை நடத்தி சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 28 போத்தல்கள் கசிப்பு மீட்கப்பட்டன.

இதேவேளை, கசிப்பை விற்பனை செய்வதற்காக 20 போத்தல் கசிப்பை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற சந்தேகநபர் ஒருவர் கல்லாறு பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பகுதிகளில் தொடர்ச்சியாக கைதுகள் இடம்பெற்றாலும் கசிப்பு காய்ச்சுதல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .