2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கசிப்பு மன்னனுக்கு விளக்கமறியல்

George   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பலருக்கு அச்சுறுத்தல் விடுத்து பல ஆண்டுகளாக கசிப்பு காய்ச்சுதல் மற்றும் விற்பனை ஈடுபட்டு வந்த சந்தேகநபரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்று புதன்கிழமை (28) உத்தரவிட்டார்.

மேற்படி நபர், கசிப்பு காய்ச்சுவதிலும், விற்பனை செய்வதிலும் புளியம்பொக்கை, முரசுமோட்டை, ஊரியான் மற்றும் தர்மபுரம் ஆகிய பகுதிகளில் பிரபல்யமானவர்.

கடந்த 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் மூன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இதே குற்றத்துக்காக தண்டனை அனுபவித்தவர்.

தண்டனை அனுபவித்த பின்னர் வெளியி;ல் வந்து, தன்னைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததுடன், தொடர்ந்தும் கசிப்பு காய்ச்சுதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.

கண்டாவளை பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபடும் போது, கிளிநொச்சி பொலிஸாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .