2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கஞ்சா ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் மூழ்கியதா?

Freelancer   / 2022 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்திச் சென்ற போது,  நடுக்கடலில் படகு மூழ்கியதில்  படகில்  இருந்த கஞ்சா மூட்டைகள் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவை, பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அடுத்தடுத்து கரை ஒதுங்கி வருகின்றமை உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய இரகசிய விசாரணையில் வெளியாகியுள்ளது.

மேலும், நேற்று தனுஷ்கோடி அருகே கரை ஒதுங்கிய 96 கிலோ கஞ்சாவை மரைன் பொலிஸார் பறிமுதல் செய்து போதை பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இலங்கைக்கு மிக அருகாமையில் தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட கடலோர பகுதிகளில் இருப்பதால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கஞ்சா, சமையல்  மஞ்சள், கடல் அட்டை, கடல் குதிரை, திமிங்கல இறகு, ஐஸ் போதைப்பொருள் உள்ளிட்டவைகள் சமீப காலமாக அதிகளவு கடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
 
கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக இந்திய இலங்கை கடற்படை சர்வதேச கடல் எல்லையில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ள நிலையிலும் கடத்தல் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், தமிழக கடலோரப் பகுதிகளில் கஞ்சா மூட்டைகள் ஒதுக்குவது குறித்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில், நாகை மாவட்ட கடற்கரையிலிருந்து பைப்பர் படகு ஒன்றில் இலங்கைக்கு கஞ்சா மூட்டைகள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கடத்திச் செல்லப்பட்டதாகவும், கடல் சீற்றம் காரணமாக அந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் இருந்த கடத்தல்காரர்கள் படகை மீட்டுள்ளனர்.
 
ஆனால் அந்த படகில் இருந்த கஞ்சா மூட்டைகள் கடல் அலை காரணமாக கடலில்  நாலாபுறமும் சிதறி தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையில் கரை ஒதுங்கி வருவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும், கஞ்சா மூட்டைகள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு யார்  கடத்திச் சென்றார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்ட கடத்தல்காரர்கள் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த சில 15 நாட்களில் தமிழக கடலோர பகுதிகளில் சுமார் 800 கிலோவுக்கு அதிகமான கஞ்சா கரை  ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X