2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கடத்தல் வாகனம் குடைசாய்ந்தது

George   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியில் திங்கட்கிழமை (03) அதிகாலை மரக்குற்றிகளுடன் குடைசாய்;ந்த நிலையில் கெப் ரக வாகனம் ஒன்றை கைப்பற்றியதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கராயன் காட்டுப்பகுதியில் இருந்து, சட்டவிரோதமாக மரங்களைக் கடத்திச் செல்லும் போது, இந்த கெப் ரக வாகனம் குடைசாய்ந்துள்ளது.  இதனையடுத்து, அதனை கைவிட்டுவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த வாகனத்தில் பாலை மரக்குற்றிகள் 7 இருந்ததாகவும்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .