2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

கடற்படையினரைத் தாக்கியோரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்

Editorial   / 2017 நவம்பர் 14 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை கிழக்குப் பகுதியில், கடற்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், இன்று (14) இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது ஒருவர் கடற்படையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குடவத்தை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே, இவ்வாறு இடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் மணல் ஏற்றிவந்த ஹன்டர் ரக வாகனத்தை, கடலோர காவற்கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் நிறுத்த முயற்சித்தபோது, அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில், பருத்தித்துறை பொலிஸாரால் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .