2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கடும் மழையால் போக்குவரத்து துண்டிப்பு

Niroshini   / 2021 ஜனவரி 14 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

தொடர்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக, வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று பெய்த கடும் மழை காரணமாக, வவுனியா - சின்னத்தம்பனை கிராமத்திலிருந்து  மடு தேவாலயத்துக்கு செல்லும் பிரதான வீதியின் பாலம்  முற்றாக சேதமடைந்துள்ளது.

பாலம் பாதிப்படைந்துள்ள நிலையில், இவ்வீதியை பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த வீதி  இரணைஇலுப்பைக்குளம்,  செங்கல்படை, வேலங்குளம், மடுக்குளம், சின்னத்தம்பனை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், மடு பிரதேச செயலகத்துக்கு செல்லும் பிரதான வீதியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தற்போது பாலம் சேதமடைந்தமையால், மன்னார் பிரதான வீதிக்கு செல்வதானால்,  பத்து கிலோமீற்றர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மக்களின் நன்மை கருதி குறித்த பாலத்தை உடனடியாக  திருத்தி  தருமாறு, உரிய அதிகாரிகளிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .