Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மார்ச் 25 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலைகள், பொது வைத்தியசாலை வளாகம் உள்ளிட்ட கிளிநொச்சி நகரம் ஆகிய பகுதிகளில், கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துக்காணப்படுவதுடன், நாய்க்கடிக்கு இலக்காகுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இவ்வாறு நாய்களின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதால், நாய்க்கடிக்கு இலக்காகுவோர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுவதுடன், விபத்துகளும் இடம்பெறுகின்றன.
பாடசாலைகளில் மதிய உணவு வழங்கப்படுவதால் மீதியான உணவுகளை மாணவர்கள் கொட்டுவதால், பாடசாலைகளில் அதிகளவான தெருநாய்கள் ஒன்று சேருகின்றன.
இவ்வாறு கிளிநொச்சி நகரத்திலும் பொதுவைத்தியசாலை வளாகத்திலும் பாடசாலைகளிலும் ஏனைய இடங்களிலும் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது.
எனவே, இக்கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச்சங்க நிர்வாகம் மற்றும் மாவட்ட பொதுஅமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago